மரபு வழியாக வந்த இந்திய போர்க்கலை குறித்த விபரங்களை உள்ளடக்கிய நுால். கள ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் படைக்கலப் பயிற்சிப் பள்ளிகள் இருந்ததுபற்றிய ஆதாரங்களை தருகிறது. தமிழர் போர் முறையான சிலம்பம் பற்றிய விபரங்களையும் தருகிறது. போர்க்கலையின் பல்வேறு பரிணாமங்களை, 28 அத்தியாயங்களில் தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இலக்கிய ஆதாரங்களும் தரப்பட்டுள்ளன.
போர்க்கலையின் பல நிலை பற்றிய வரைபடங்களும் இடம் பெற்றுள்ளன. போர்க்கலை பற்றிய புரிதலுக்கு உதவியாக உள்ளது. காட்டு மிருகங்களின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு அறிந்த வித்தைகளையும் தருகிறது. ஆதிச்சநல்லுார் அகழ்வாய்வில் கிடைத்துள்ள போர்க் கருவிகள் படங்களுடன் தரப்பட்டுள்ளன. தமிழர் போர்க்கலை குறித்து விரிவான தகவல்கள் அடங்கிய நுால்.
–
ஒளி