புத்தம்புது காலை என்று தான் சொல்லுவர். இங்கே தலைப்பே வித்தியாசம். ஆமாம் புத்தம்புது மாலை. கதையும் வித்தியாசமாக விறுவிறுப்பாகத்தான் செல்லுகிறது. அநியாயம் செய்பவனை அழிக்க வேண்டுமா? கூட இருந்தே குழி தோண்டு. இது தான் கதையின் மூலம். படித்தவனுக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. முன்னனுபவம் கேட்கின்றனர். யாருமே வேலை தராமல் முன்னனுபவம் எப்படி வரும். நல்ல கேள்வி தான்.
பயிற்சி பெறுபவனாக சேர வேண்டியது தானே... அதுவும் ஒரு படிப்பு மாதிரி தான். ஐந்தரை ஆண்டு படித்த டாக்டருக்கு கிடைக்கும் வருமானத்தை விட, அதிகம் படிக்காமல் தொழிலதிபர் ஆகிவிடலாம் அல்லது அரசியல்வாதி ஆகி விடலாம் என்று தோன்றுகிறது.
மருத்துவம், வருமானம் தரும் தொழில் அல்ல; சேவைத் தொழில். மருந்து கம்பெனி வருமான தொழில். இதை நவீனமாக சொல்கிறது. அரசியலில் பொறுமை முக்கியம். சிரிச்சு கழுத்தை அறுக்க வேண்டும். கழுத்தை அறுத்த பின் சிரிக்கணும். இப்படி முத்தாய்ப்புடன் சினிமா துறைக்கு ஏற்ற கதை.
–
சீத்தலைச்சாத்தன்