பூர்விகம், வடமொழிச் சொல். பூர்வீகம் என்றும் நீட்டிச் சொல்வதுமுண்டு. முற்காலம், பழமை என்னும் பொருளுடைய இச்சொல்லில் இவ்வளவு முரண்கள் இருக்கும்போது பூர்வீக சொத்தில் இருக்கத்தானே செய்யும்.
ஒருவர் சம்பாதிக்காத சொத்து; ஆனால் உரிமைப்பட்ட சொத்து. இதுவே பூர்வீக சொத்து என இலக்கணம் கூறுகிறது. ஒருவர் வியர்வை சிந்தாமல், உழைக்காமல், தனக்கு வந்தே தீர வேண்டிய சொத்து ஒன்று இருக்குமானால், அதுவே பூர்வீக சொத்து.
சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் ஏமாற்றுவது, கணவன் – மனைவிக்கு இடையிலான சொத்துக்கள், குடும்பச் சொத்துக்கள், மனைவி பெயரில் அண்ணன், தம்பி பெயரில் வாங்கிய சொத்து, பாகப்பிரிவினை என பலதரப்பட்ட சிக்கல்களுக்கு சட்டம் என்ன சொல்கிறது என விளக்குகிறது.
சட்டத்தின் வழி சொத்துக்களை காப்பது எப்படி என்றும், பூர்வீகச் சொத்துக்களை எவ்வாறு அடைவது என்றும் விளக்கும் நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்