இறை, மொழி, தாய், தந்தை, காதல், நட்பு, குடும்பம், இசை, சட்டம், கல்வி, தொழில், தன்னம்பிக்கை, சுற்றுப்புறத் துாய்மை என தலைப்புகளில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழ் வளர்த்த அறிஞர்களுக்கு நன்றி பாராட்டுகிறது.
மருத்துவத்தின் மகத்துவத்தைப் பேசுகிறது. எளிய வாழ்வே உண்மை என்றவர் காமராஜர் எனவும், தேசம் மீது நிறைய நேசம் கொண்டு சுவாசித்து சாதித்தவர் என எத்திராஜ் மகளிர் கல்லுாரி நிறுவனரையும் போற்றுகிறது.
விடுதலைக்கு வித்திட்ட தலைவர்கள் பலரையும் நினைவுகூரும் கவிதைகளில் தேசத்தின் நேசம் வெளிப்படுகிறது. இரு பொருள் தரும் கவிதை மற்றும் லா, ஐ, மை, ரம் என்னும் தலைப்புகளில் அமைந்த கவிதைகளிலும், இசையால் இணைவோம் என்னும் கவிதையில் இனிதுற, இன்புற, களிப்புற, பயனுற, பதமுற, பண்புற, அன்புற அழகுற, குணமுற, தெளிவுற, ஜெயமுற என சொற்கட்டும் சந்தங்கள் நிறைந்து தாளம் போடுகின்றன. இசைப் பாடலாய் மிளிரும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்