நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்கள், வழிபாட்டு முறைகள், வழிபாட்டுப் பொருட்கள், கடைப்பிடிக்கும் சடங்குகள் போன்ற அனைத்தையுமே நம் முன்னோர்கள் ஒரு அர்த்தத்துடன் தான் செய்து வந்திருக்கின்றனர்.
நம்முடைய பழக்கவழக்கங்களில் உள்ள அறிவியல் ரீதியான உண்மைகளை நாம் மறந்து விட்டு, வெறும் சடங்குகளாக பார்ப்பதால் அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் தர மறுக்கிறோம்.
இத்தகைய ஆன்மிக பழக்கவழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் ஒரு முயற்சி தான் திருமலை எழுதியுள்ள ஆன்மிக ஒளியில் அறிவியல் என்ற இந்த புத்தகம்.
முப்பது சிறிய கட்டுரைகளை உள்ளடக்கிய மருந்துப் பெட்டகமாக விளங்கும் இந்த புத்தகத் தில் ஒரு பொருளை எடுத்துக்கொண்டால் அப் பொருளுக்கான பெயர்க் காரணம், அப்பொருள் விளைகின்ற பகுதி, அப்பொருள் பயன்படும் தன்மை, அதற்கான இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டார் குறிப்புகள், ஆயுர்வேதத் தன்மைகள், நிறைவாக அறிவியல் அப்பொருளை எம்முறையில் பயன்படுத்தச் சொல்கிறது என வரிசைப்படுத்தி சொல்லி வரும் போது, இத்தனை நாட்களாக நாம் இந்தப் பொருளைப் பார்த்திருக்கிறோம், பயன்படுத்தியிருக்கிறோம்.
மருத்துவ முறைகளும், அறுவை சிகிச்சை முறையும் அன்றைக்கே இருந்திருக்கின்றன என்பதை அயல்நாட்டு அறிஞர்களின் குறிப்புகளாக இவர் எடுத்துரைத்திருக்கிறார்.
–
இளங்கோவன்