பிரபல எழுத்தாளர் தமிழ்வாணனின், நான்கு படைப்புகளின் தொகுப்பு நுால். இதர உறவுகள் இல்லாத அப்பா, மகளின் பாசப்பிணைப்பை, ‘மணிமொழி நீ என்னை மறந்து விடு’ என்ற நாவலில் தனக்கிருந்த கொடிய பழக்கத்தை மகளிடம் சொல்ல துடிப்பதும், ‘சும்மா தானம்மா கூப்பிட்டேன்’ என சமாளிப்பதும் குற்ற உணர்ச்சியை காட்டுகிறது.
பணி நிமித்தம் விடுதியில் தங்கும் காவேரி, தோழியருடன் பயணிப்பதை பேசுகிறது, புயல் வீசிய இரவில் நாவல். கடையில் திருடிய பெண், வாகனம் மோதி இறக்கிறார். அவள் மீது திருட்டு பட்டம் விழக்கூடாது என, அதற்கு பின் நடக்கும் நிகழ்வுகள் சுவாரசியம் தருகின்றன.
அன்பு, ஏக்கம், காதல், ஏமாற்றம், ஆடம்பரம், நம்பிக்கை துரோகம் என பெண்கள் சந்திப்பதை பதிவு செய்துள்ளது. எளிய மொழி நடையில் சுவாரசியம் குன்றாத நுால்.
–
டி.எஸ்.ராயன்