ஆதிதிராவிட மக்களின் அறிவுத்தளத்தை வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், அகழ்வாய்வு குறிப்புகள் அடிப்படையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
ஐரோப்பியக் கிறிஸ்தவ அறிஞர்கள், இந்தியாவில் அடித்தள மக்கள் நிறைந்துள்ளதற்கு உரிய காரணங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்படி அமைந்து உள்ளது. பழந்தமிழர் சமத்துவப் பண்பாட்டு சூழல் பின்னணியில் ஜாதிகளின் ஆக்கிரமிப்பு வேரூன்றி பரவிய அரசியல், சமூகச் சூழல்கள் ஒப்பீட்டுடன் காட்டப்பட்டுள்ளன.
திராவிட அரசியலுக்கும், ஆட்சிக் கொள்கைகளுக்கும் ஆதிதிராவிடர்களின் அறிவுத்தளமே அடிப்படையானது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு