இயற்கையிடம் இருந்து கற்று வாழ்விடத்தை அமைப்பது பற்றிய செயல்முறையை தரும் புத்தகம். உரிய ஒப்பீட்டு படங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டுமானங்களை மேம்படுத்த உதவும் வகையில் இயற்கையிடமிருந்து கற்ற பாடங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. வளர்ந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இயற்கை சார்ந்த கட்டுமான முறைகளை விவரிக்கிறது.
தேன்கூடு, சிலந்திக்கூடு, கறையான் புற்று போன்றவை உருவாக்கும் கட்டுமான வடிவமைப்பு பற்றி உள்ளார்ந்து ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. உயிரியல் சார்புடன் எழுப்பப்படும் கட்டுமானம் பற்றி விவரிக்கும் நுால்.
–
ஒளி