பகவான் ரமணரின் சமகாலத்தவரான தங்கக்கை சுவாமிகள் என அழைக்கப்படும், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால்.
குழந்தையாக இருந்த போது, சிவன் சன்னதியில் கிருதியை மனம் உருகப் பாடியவர்; கிருஷ்ணன் பொம்மையைக் கடையில் வாங்கும் போது குழந்தை சேஷாத்ரி சொன்ன கிருஷ்ண ஸோஸ்திரத்தைக் கேட்ட கடைக்காரர், பொம்மைக்கு காசு வாங்க மறுத்துவிட்டார்.
சித்தராகவும் பித்தராகவும் கடைகளில் நுழைந்து பொருட்களை வீசி எறிந்த போது கடைக்காரருக்கு பெரிய அளவில் ஏற்பட்ட நன்மைகளும், பார்வையற்ற சிறுவனுக்கு பார்வை அருளிய நிகழ்வும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாயுமானவர், விட்டோப சாமிகள், வள்ளிமலை அர்த்தநாரி சுவாமிகள் போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகளும் சுட்டப்பட்டுள்ளன. சித்தன் போக்கு சிவன் போக்கு என வாழ்ந்து காட்டிய, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளுடைய ஞானத்தின் விரிவாக முகிழ்த்துள்ள நுால்.
–
புலவர் சு.மதியழகன்