சுயமுன்னேற்ற கருத்துக்களை கோர்த்துள்ள நுால். அர்த்தம் உணர்ந்து புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்தவன் மீது வீணாக கோபப்படுபவன் தன் தவறை மறைக்க பார்க்கிறான் என்பதும் உண்மைதானே! பிறப்பு, இறப்பு ஏன் திருமணம் கூட மனிதனின் கையில் இல்லை. எழுதுபவன் இறைவன் தான்.
உள்மனம் சொல்வதில் நல்லதை எடுத்து நல்லது இல்லாததை வடிகட்டி விடுங்கள். அற்புதமான கருத்து. எல்லாருக்கும் நல்லவனாக இருக்க விரும்பினால் பேச்சைக் குறை; மவுனத்தை கடைப்பிடி. அதுபோல நல்லவன் என்று எப்பொழுதும் நினை; நல்லவனாகவே வாழ்வாய். இது போல் 425 முத்துக்களைக் கோர்த்து மணிஆரமாக்கப்பட்டுள்ளது.
கடைசியில் தங்கத்தை பற்றிய தகவல்களும் உண்டு. தங்கத்தின் விலையும் நிரந்தரமல்ல; மனித வாழ்வும் தான். இளம் தலைமுறைக்கு பரிசாக வழங்க ஏற்ற நுால்.
– சீத்தலைச் சாத்தன்