உனக்கென இருப்பேன் என சொல்வது கதையின் நாயகன் அஜயன். நாயகி மிதுனா, நண்பன் குணா, நல்லவன் பரமு வாத்தியார், குவைத் நண்பன் செந்தில், அவன் மனைவியாக இருந்து அஜயனை மணக்க இருந்த விஸ்ரா என, எல்லாருமே, உனக்கென இருப்பேன் என்று சொல்கின்றனரோ இல்லையோ... கதை இவர்களை சுற்றி நதி போல ஓடுகிறது.
இரண்டு ஆண்டு, ‘கல்ப்’ போனால் போதும்; சம்பாதித்து திரும்பி விடலாம் என்று தான் எல்லாரும் போகின்றனர்.
மந்திரி, நடிகன், அரசியல் தலைவன், வெளிநாட்டில் வேலை செய்பவனுக்கு நண்பனாக இருந்தால், எல்லாத்தையும் இலவசமாக அனுபவிக்கலாம் என உணர்ந்து சொல்கிறது. மாட்டிக் கொள்ளாதவரை எதுவும் தப்பாக தெரியாது. இது இந்த புதினம் சொல்லும் நீதி.
–
சீத்தலைச் சாத்தன்