இந்திய வாரிசு உரிமைச் சட்டம் பற்றி விளக்கும் நுால். ஆங்கிலத்தில் ‘வில்’ என்று சொல்லப்படும் உயில், ‘விருப்புறுதி ஆவணம்’ என்று பதிவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பூர்வீக சொத்தோ அல்லது சுய சம்பாத்திய சொத்தோ எதுவாயினும் பெயரில் பத்திரமும் பட்டாவும் உள்ள சொத்துக்களை வாரிசுகளுக்கோ, மூன்றாவது மனிதருக்கோ உயில் எழுதலாம். இது, எழுதியவரின் இறப்புக்கு பின் நடைமுறைக்கு வரும்.
ஒரு பத்திரத்தை உருவாக்கிய 120 நாட்களுக்குள் பதிவு செய்து விட வேண்டும் என்ற நடைமுறை உயிலுக்கு இல்லை. உயில் விபரம் இறப்புக்கு பிறகு யாருக்கும் தெரியாவிட்டால், முறைப்படி சொத்துக்கள் வாரிசுக்கு சென்று விடும்.
ஆதலால், நம்பிக்கையான இளையவரிடம் சொல்லி வைக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அடங்கிய நுால்.
– புலவர் சு.மதியழகன்