கட்டடங்கள் கட்டுவதற்கு, கட்டுமானத் தொழில் படிப்பறிவோடு பட்டறிவும் பயிற்சியும் இன்றியமையாதது என்பதை விளக்கும் நுால். கட்டுமான இடத்தில் மண் பரிசோதனை செய்தல்; ஜல்லி, கம்பிகள், சிமென்ட், மணல், தண்ணீரை தர ஆய்வுக்கு உட்படுத்துதல் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
கலவை நன்கு பரவா விட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி தரப்பட்டுள்ளது. வெளிப்புற உட்புற பூச்சு, வண்ணம் அடித்தல், கூரைத் தளத்தில் டைல்ஸ் வெதரிங் கோர்ஸ் அமைப்பதில் உள்ள தொழில்நுட்பங்கள், கட்டுமான பணிகள் முடிந்து ஒப்படைக்கும் வரை பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் விரிவாகப் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
மனித உடல் அமைப்போடு கட்டடப் பாகங்களை ஒப்பிட்டு இருப்பது அருமை. கட்டடக் கலைஞர்கள் கைகளில் இருக்க வேண்டிய நுால்.
–
புலவர் சு.மதியழகன்