குழந்தை வளர்ப்பதை கலையாகச் சொல்லும் நுால். பலவேறு நிலைகளில் வரும் பிரச்னைகளை எடுத்துக்கூறி, தீர்வுக்கான வழியை காட்டும் வகையில் அமைந்துள்ளது. சூப்பர் குழந்தை ஓர் அறிமுகம் என்ற தலைப்புடன் துவங்குகிறது. அடுத்து மூளை வளர்ச்சி திறன், இசையில் தொடங்குதம்மா, தகவல் பரிமாற்ற திறன் என எளிய தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டு உள்ளன.
விளையாட்டு முறையில் குழந்தைகளின் திறனை வளர்ப்பதற்கான எளிய பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. சிந்தித்தல், முடிவெடுத்தல், விருப்பத்தை தேர்வு செய்தல் போன்றவற்றை பயிற்சி மூலம் வளர்ப்பதற்கு வழிமுறைகள் உள்ளன.
இறுதியாக, குழந்தைகளிடம் கேட்க வேண்டிய, 50 கேள்விகள் என்ற தலைப்பில் அமைந்தது. இதில், குழந்தைகளை புரிந்து பழக ஏற்ற வகையிலான கேள்விகள் தரப்பட்டுள்ளன. இவை, குழந்தை வளர்ப்பு கலையின் நுட்பங்களை எளிமையாக மனதில் பதிய வைக்கின்றன.
குழந்தை வளர்ப்பு மிக இயல்பான, மகிழ்ச்சியாக நிறைவேற்றும் கலை என்பதை எளிய நடையில் தரும் நுால்.
–
மலர்