ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் ஆதியானவள் அன்னை காமாட்சி காஞ்சியிலே குடியிருக்கும் விதம், ஆதிசங்கரர் கோவிலை அமைத்த விதம், தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காத்தருளிய கருணை ஆகியவற்றை ஆசிரியர் பிரபுசங்கர் குறிப்பிடுகிறார். அன்னை காமாட்சியின் அருள் கிடைப்பதற்கான ஸ்லோகங்களையும் விவரிக்கிறார்.
இரண்டாவதாக அன்னை மீனாட்சியின் அருளை புத்தகத்தில் வாரி வழங்குகிறார். அன்னையின் வரலாறு, மதுரையின் பெருமை, திருவிழாக்கள் என ஒவ்வொரு நிகழ்வையும் வழிகாட்டி போல விவரித்து கொண்டு செல்கிறார்.
திருவானைக்காவில் குடியிருக்கும் அகிலாண்டேஸ்வரி, குற்றாலத்தின் பராசக்தியாம் குற்றால நாயகி, திருவாரூரில் வீற்றிருக்கும் கமலாம்பிகை மற்றும் கன்னியாகுமரியில் பகவதியாக வீற்றிருக்கும் குமரியன்னை என, ஒவ்வொரு சக்தியின் சொரூபத்திற்கு கதையும் காரணமுமாக விளக்கி சொல்லியுள்ளார். அன்னையின் பக்தர்கள் படித்து பார்த்து ஆனந்தக் கூத்தாட வேண்டிய புத்தகம்.
–
எம்.எம்.ஜெ.,