நட்சத்திரக் கோட்டை, வெப்பச் சலனம், பஞ்சாக்னி என்ற குறு நாவல்களின் தொகுப்பு நுால். சீரங்கப்பட்டணத்தில் காவிரி கரையில் நிகழும் போர் சூழலில் நட்சத்திரக் கோட்டை கதை நிகழ்கிறது.
கதை ஓட்டத்தின் நடுவே குற்றாலக் குறவஞ்சி, கலிங்கத்துப் பரணி போன்ற சிற்றிலக்கியப் பாடல்கள் இனிக்க வைக்கின்றன. குடிப்படை, மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என பலவற்றை காட்டுகிறார். வெப்பச் சலனம் கதையில் கர்நாடக மாநிலச் சூழல், வீட்டு உரிமையாளர் விஜயலட்சுமியின் காதல் லீலை, பூட்டிய வீட்டுக்குள் தொழிலதிபர் படுகொலை, நடு நடுவே கவிதை மின்னல்களுடன் முடிகிறது.
பஞ்சாக்னி கதையில் ஐந்து கதாபாத்திரங்களின் அறச் சீற்றம் தெரிகிறது. வரலாறு கொஞ்சம், கற்பனை அதிகமாய் புனைந்த குறுநாவல்களின் தொகுப்பு.
–
முனைவர் மா.கி.ரமணன்