சித்தர்களில் 12 பேரின் வாழ்க்கை வரலாறு நுாலாக்கப்பட்டுள்ளது. மரணத்தையே மாற்றி அமைக்கும் ஆற்றல் மிக்கவராய் விளங்கினார் சித்த புருஷர் ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள். திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில் அரிசி, உணவுப் பொருட் கள் வள்ளலாரின் சித்தி வளாக மாளிகைக்கு வந்தன.
கனவில் வந்த அடிகளார் உணவுப் பொருட்கள் கேட்டதாகவும், அவற்றை எடுத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார். நாளைய உணவுக்காக வருந்திய நேரத்தில் ராமலிங்க அடிகளாரின் அற்புத ஆற்றலை எண்ணி ஆச்சரியப்பட்டனர்.
சித்தர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது அவர்களை ஏற்றுக் கொள்ளும்வரை சமூகம் என்ன பாடுபடுத்கிறது, ஏற்றுக் கொண்ட பின் எப்படி கொண்டாடுகிறது என புரிந்து கொள்ள முடிகிறது. மனிதனாக பிறந்து மகானாக மாறி சித்தராய் மறைவது சிலருக்கு மட்டுமே கிடைத்த வரம். அந்த வரம் பெற்றவர்கள் பற்றிய தொகுப்பு நுால்.
–
எம்.எம்.ஜெ.,