தமிழ் இலக்கிய பிரபந்தங்களில் ஒரு வகையான பரணி பாடல்களின் வடிவில் இயற்றப்பட்ட கலிங்கத்துப்பரணிக்கு எளிய நடையில் பொழிப்புரையும் அருஞ்சொற்பொருளும் தரப்பட்டுள்ள நூல். ஒவ்வொரு பாடலும் பொருள் பிரித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
குலோத்துங்க சோழனுக்குப் படைத்தலைவனாக இருந்த கருணாகரத் தொண்டைமான் கலிங்க நாட்டை வென்ற நிலையில் போர்த் தகவல்களைப் புகழ் மாலையாக தொடுத்து புலவர் செயங்கொண்டார் பாடிய பாடல்கள் பரணி வகையில் அமைந்தவை.
செய்யுள் ஒவ்வொன்றுக்கும் தனித் தலைப்புகள் தந்து அதன்கீழ் உரையும் செய்யுளில் காணப்படும் அருஞ்சொற்கள் அனைத்திற்கும் பொருளும் தந்துள்ளது வாசிப்புக்கு எளிதாக அமைந்துள்ளது. பாடல்களையும் வரலாற்றையும் உள்வாங்கி படைக்கப்பட்டுள்ள நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு