உலகில் மிக அரிதாக நடக்கும் நிகழ்வுகளைத் திரட்டி, அறிவார்ந்த கருத்துகளை மாறுபட்ட நடையில் விவரிக்கும் நுால். அறிவியல், தத்துவம், இறையியலை, உளவியல் கண்ணோட்டத்தோடு பிணைத்துள்ளது.
விந்தையான கற்பனை நிகழ்வுகளை தற்கால நடைமுறை அறிவியலுடன் பொருத்தி விளக்குகிறது. காற்றின் ஒளி விலகு விகிதத்தை, ஒப்பிடும் பார்வை கவனத்தை ஈர்க்கிறது. மனிதன் கண்களுக்கு தெரியாத உருவம் பெற்றால் என்ன நிகழும் என்பது நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளது.
தண்ணீர் கற்பிக்கும் தத்துவம், தொலை உணர்தல், நெடிது இயங்கல், புவி சமைத்தல், காலம் தாண்டல், வடிவம் திரிதல், முற்றறிதல், முற்றழிதல், பூதம் அடக்கல் போன்ற மாறுபட்ட தலைப்புகளோடு புதிய தகவல்களை அள்ளித் தருகிறது. சிறந்த தகவல் களஞ்சியமாக அமைந்த நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு