பதிகள் தோறும் சென்று பக்தியால் பதிகங்கள் பாடியது பற்றி ஐந்தாம் திருமுறையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில், 100 பதிகங்களும், 1,012 தேவாரப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
பாடல்களை ஆராய்ந்து உரையாசிரியர் கண்ட அனுபவம் முற்பகுதியில் தரப்பட்டுள்ளது. சிவபெருமான் நெற்றிக் கண் திறந்து காட்டியதை நயம்பட விளக்குகிறது. அடி முடி காண திருமாலும், பிரமனும் முயற்சி செய்தது கூறப்பட்டுள்ளது.
நரசிங்க மூர்த்தியின் கோபத்தையும், வேகத்தையும் தணித்த சரபமூர்த்தியின் வரலாறு தரப்பட்டுள்ளது. நரியின் செயலை வைத்து பேராசைப்படுபவர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாவார் என்ற கருத்தை, ‘நரிவிருத்தம் ஆகுவர் நாடரே’ என்ற பாடலில் விளக்கியுள்ளார். பக்திச் சுவையோடு பாட உதவும் நுால்.
–
புலவர் இரா.நாராயணன்