மாற்று கல்வி முறையின் சிறப்புகளை விவரிக்கும் நுால். சமூக மேம்பாட்டு, தமிழ் வழி, சூழலியல், கிராம குழந்தைகள் என, 17 செயல்பாடுகளை தொகுத்துள்ளது. கலை, கைவினையை கற்பித்தலில், வகுப்பறையை கடந்து கள அனுபவத்தை கற்றுக்கொடுக்கிறது. பெற்றோர், ஆசிரியர், மாணவர் உறவில் வலு சேர்க்கப்பட்டுள்ளதை விவரிக்கிறது.
பாடத்துடன் தற்சார்பு வாழ்க்கை முறையை கற்று கொடுக்கும், ‘புவிதம்’ பள்ளியின் சூழலியலை விவரிக்கிறது. தனிமனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மையப்படுத்தியதாக கல்வி இருக்க வேண்டும் என போதிக்கும் பள்ளி சிறப்புகளை சொல்கிறது.
மனித வாழ்வியலோடு சேர்ந்த கல்வி முறையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. வித்தியாசமான கல்வி முறையை விரும்புவோர் வாசிக்க வேண்டிய நுால்.
–
டி.எஸ்.ராயன்