நோய் வராமல் இருக்க உணவே மருந்தாக பயன்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள நுால். வள்ளலார் ராமலிங்க அடிகள் கூறியுள்ள தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சத்தான உணவுகளை உண்ணுவது மட்டுமின்றி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டிய அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. கழிவுகளை வெளியேற்றி பித்தம், வாதம் போன்ற பிரச்னைகளை தீர்க்கும் வழிமுறைகளும் இதில் உள்ளன.
எந்தெந்த காய்கறி எப்போது சாப்பிட வேண்டும்; அதற்கான நேரம் பற்றியும் குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. பசி இல்லாமல் சாப்பிடக் கூடாது என அறிவுரை கூறப்பட்டுள்ளது. இயற்கை உணவுகள், கீரைகளின் மருத்துவ குணங்களைக் கூறி, அவற்றை எப்படி உணவாக மாற்றி சாப்பிட வேண்டும் என்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாப்பிடும் முறை பற்றி அறிவுறுத்தி, எந்த உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதும் படத்துடன் காட்டப்பட்டுள்ளது. உயிரும் மெய்யும் உணவே என வலியுறுத்தும் நுால்.
–
முகில் குமரன்