அப்பர் பெருமான் பாடிய தேவாரப் பாடல்களுக்கு எளிய நடையில் விளக்கம் தரும் நுால். நான்காம் திருமுறையில், 114 பதிகங்களும், 1,070 பாடல்களும் இடம் பெற்றுள்ளன. பாடல் பெற்ற ஊரின் சிறப்பும், தலத்தில் இறைவன் மற்றும் இறைவி பெயர், ஸ்தல மரம் முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பண் பற்றிய குறிப்பையும் தருகிறது. சிவன் அருளால் நோய் நீங்கியதை, ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’ என்று பாடியுள்ளார்.
அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான திருவதிகை வீரட்டானம் பற்றியும் இடம் பெற்றுள்ளன. பஞ்சம் தீர்த்து படிக்காசு பெற்றது, சம்பந்தர் சந்திப்பு, மூடிய கதவை திறக்கப் பாடியது, சமணர்களை வென்றது போன்றவை தரப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்கள் படித்துப் பயன் பெறலாம்.
–
புலவர் இரா.நாராயணன்