ராமநாதபுரம் பாம்பனில் பிறந்தவர், பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக வழிபட்டு தமிழகம் முழுக்க யாத்திரை சென்றார். கற்றறிந்ததை, அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமாரஸ் தவமாக அருளிய மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால்.
வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக, மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள். இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவரிடம், ‘முருகனே பழநிக்கு அழைத்தாரா...’ என நண்பர் கேட்க, ‘ஆம்...’ என்று சொன்னதற்காக முருகபெருமானே கடிந்து கொண்டதால், இறுதி வரை பழநி செல்லவில்லை.
அதே நேரம், காணக்கிடைக்காத அதிசய இடத்தை, முருகனே அழைத்துச் சென்று காண்பித்த வரம் பெற்றவர். எழுத்தும், இறை உணர்வுமாக வாழ்ந்தவரின் வரலாற்றை படிப்பது, கந்தனை வணங்குவதற்கு சமம் என விளக்கும் நுால்.
–
எம்.எம்.ஜெ.,