பச்சைப்புடவைக்காரியின் மேல் பித்தாகி எழுதப்பட்டுள்ள நுால். ஓயாமல் அன்னை மீனாட்சி, பராசக்தி, உமா மகேஸ்வரி, பார்வதி என அன்னை சொரூபங்களை, ஆனந்த ஆராதனைகளை அடுக்கிக் கொண்டே போகிறது.
அம்மாவை எத்தனை முறை அழைத்தாலும் உள்ளிருந்து ஊற்றெடுக்கும் பாச உணர்வு தான், மீனாட்சி மீதான பக்தி உணர்வு. இதை தராசு தட்டில் எடையிட்டு அறிய முடியாது. படிக்கும் போது ஏற்படும் பரவச உணர்வின் வாயிலாக எழுத்தை எடை போட முடியும்.
சிலரின் ‘வாட்ஸ் ஆப்’ ஸ்டேட்டஸ், சோர்ந்த மனதுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்வது போலிருக்கும். யாரோ, யாருக்காகவோ சொல்லப்பட்ட சேதி தான். ஆனால், நமக்கும் பாடமாக அமைகிறது.
அதுபோல தான் பச்சைப்புடவைக்காரியில் வரும் கதைகளில் சுற்றி சுழல்கின்றன நிஜ கதாபாத்திரங்களின் பிம்பங்கள். நம்பிக்கை என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். புத்தகத்தை படித்த பின், மீனாட்சியின் அருள் கிடைக்கும் என மனம் நம்பிக்கை கொள்ளும்.
–
எம்.எம்.ஜெ.,