திருவள்ளுவர் பற்றிய தகவல்களை உரிய ஆதாரங்களோடு தரும் நுால். கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள், திருக்குறளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, கட்டளைக்கல், வெள்ளம், உறக்கம், செவி, மடி, பேடி, பட்டி, விளி, அற்றம், வித்து, தாழ், பீலி, கள்ளம், புறத்தும், அகத்தும், வடு, கடலோடி, பொத்து என வழக்குச் சொற்கள் பலவும் திருக்குறளில் உள்ளது எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
குறளோடு சேர்த்து, இந்த சொற்களுக்கு விளக்கமும் எழுதப்பட்டுள்ளது. திருவள்ளுவர் குமரியைச் சேர்ந்தவர் என்பதற்கு இது வலு சேர்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொற்கள், மலையாள மொழியில் இன்று அறியப்படுகிறது என்பதை குறிப்பிட்டுள்ளது. வட்டார மொழி, கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை ஆராய்வோருக்கு வழிகாட்டும் நுால்.
–
கீதா