‘சரவணபவ’ என்ற மந்திரம் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். அறுபடை வீடுகளும் மெய்யெழுத்துகளால் இறை பெயர் ஆகியிருக்கும் முறை, அங்குள்ள ஓவியங்கள், சுற்றியுள்ள திருத்தலங்கள், தொல்காப்பியம், திருமந்திரம், தேவாரம், திருப்புகழ், திருக்குறளை சான்றாகக் கொண்டு தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன.
சமஸ்கிருத சொற்களின் வேர்ச் சொற்களாக தமிழ்ச் சொற்கள் அமைந்திருப்பதும், அர்ச்சனையாகும் சமஸ்கிருத சொற்களில் தமிழோசை மிகுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் முருகனின் திருப்பெயர்கள் பதம் பிரிக்கப்பட்டு, அவை உணர்த்தும் பொருட்களும், தத்துவங்களும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ‘ஓம்’ எனும் பிரணவத்தை சமஷ்டி, வியஷ்டி நிலைகளில் பொருள் காணலாம் எனப் பதிவிடப்பட்டுள்ளது. ஆறெழுத்து மந்திரத்தில் அடங்கியுள்ள தத்துவங்களை விரித்துரைக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்