நீதியையும், ஒழுக்கத்தையும் விளக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்களும் படித்து மகிழ ஏற்றது. ‘புத்திமான் பலவானாவான்’ என்ற முதல் கதை துவங்கி, ‘மதியூகி’ என, 78 நீதி கதைகளுடன் முடிகிறது. ‘விதியை மதியால் வெல்லலாம், பொறாமையால் வந்த வினை, உழைப்பின் பெருமை, வஞ்சகரின் உறவு ஆபத்து தரும், தீயாரைக் காண்பதுவும் தீதே, எதிரியின் வலிமை அறிந்து செயல்படு, நன்றிக்கடன்’ போன்ற தலைப்புகளில் கதைகள் அமைந்துள்ளன.
புத்தியைக் கொண்டு வெள்ளாடு, சிங்கத்திடம் இருந்தும் நரியிடமிருந்தும் தப்பித்தது. இந்தக் கதையின் மூலம் புத்தியைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என்ற நீதியைத் தருகிறது. ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற தலைப்பில், சிங்கத்தை சுண்டெலி காப்பாற்றிய கதையை விவரிக்கிறது. ‘சிறியோர் பெரும்பிழை செய்தாராயினும், பெரியோர் அப்பிழை பொறுத்தல் கடனே’ என்ற நீதியை உள்ளத்தில் பதியுமாறு கூறியுள்ளது. அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நுால்.
–
புலவர் இரா.நாராயணன்