தமிழ் மீது பற்று கொண்டு அதன் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்த சைவ சமயப் பெரியோர்கள், அருளாளர்கள் பற்றி விரிவாக விரித்துரைக்கும் நுால். அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடிய தேவாரம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார், திருமூலரின் திருமந்திரம், சேக்கிழாரின் பெரிய புராணம் மற்றும் திருவிசைப்பா உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள், தமிழை வளர்த்தது பற்றி கூறப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட நுால்களில் சைவ நெறிகள் இடம் பெற்றுள்ளது பற்றிய விபரங்கள் உள்ளன. வள்ளலார், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், மறைமலை அடிகள், மனோன்மணியம் சுந்தரனார், உ.வே.சா., என சைவத்தையும் தமிழையும் மீட்டெடுத்த அருளாளர் வாழ்க்கை நிகழ்வுகள் பதிவிடப்பட்டுள்ளன.
சைவ நெறிகள் தமிழை அழகுபடுத்தி வளப்படுத்தி காலத்தால் அழியாது நிலை பெறச் செய்ததை விளக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்