தமிழன் பெருமைக்கு தனிப்பெரும் சாட்சியாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் மற்றும் அதை அமைத்த மன்னன் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். சுவை குன்றாமல் கதை போல் வரலாற்று தகவல்கள், நுட்பமாக பின்னப்பட்டுள்ளன.
மன்னர் ராஜராஜனின் அசாத்திய திறமையை எடுத்துக்காட்டும் வகையில் தொன்மையான ஆவணங்களில் இருந்து பெற்ற தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதிசயங்களின் சுரங்கமாக மிளிரும் பெரிய கோவில் உருவான கதையை மிடுக்குடன் எடுத்து கூறுகிறது.
‘பழம் பெருமை புகழ் பாடுவோம்’ என துவங்கி, ‘மாமன்னர் ராஜராஜன் புகழ் பாடுவோம்’ என்பது வரை, 38 தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. சோழர் ஆட்சியின் சிறப்பையும், மாண்பையும், விளைவையும் சுவை குன்றாமல் எடுத்துரைக்கிறது.
வரலாற்று பின்னணி, சோழர் ஆட்சியின் சிறப்பு, அதன் பயனாக எழுந்த அற்புத படைப்புகளை எளிய நடையில் தருகிறது. சலிப்பு தட்டாமல் படிப்பதற்கு உகந்த வரலாற்று நுால்.
–
ராம்