மனிதனுக்கு அருள் செய்வது மனிதாபிமானம். எங்கேயோ கிடக்கும் சொறி பிடித்த நாய்க்கு அருள் செய்ய யாரால் முடியும். பகவான் ஸ்ரீ ரமணரால் மட்டுமே முடியும். நள்ளிரவில் ஆசிரமம் அருகில் புதரில் தவித்த நாய்க்கு அன்பை வாரி வழங்கி, மோட்ச கதி வழங்கிய விபரம் குறிப்பிட்டுள்ளது.
உடலையும், மனதையும் பிரித்தறியும் வழியை அழகாகச் சொல்கிறார். ஒரு பாவமும் செய்யாத உடலை கொல்வது பாவம். மனம் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என தரும் விளக்கம் அருமை. உடலையும், ஆத்மாவையும் பிரித்தறிய முடியாது.
தடுமாறும் போதெல்லாம் ஆத்ம விசாரம் செய்ய சொல்கிறார். பிறருக்காகவே வாழ்ந்த மகான் வரலாற்றை படிப்பது, அவருடன் பயணிப்பதற்கு சமம். இந்த புத்தகத்தை படித்து விட்டு திருவண்ணாமலை ரமண பகவான் ஆசிரமத்துக்கு செல்லும் போது ரமணர் கூடவே பயணிப்பது போன்ற பிரமிப்பை தரும். ரமணரால் ரமணருக்கு சூட்டப்பட்ட மாலை.
–
எம்.எம்.ஜெ.,