தண்டியலங்காரத்தை முதன்மையாகக் கொண்டு 35 அணிகளைக் கூறியுள்ள நுால். எளிய பாடல்களால் அணியின் பொருள் மேலும் தெளிவுபடுகிறது. இவர் இயற்றிய பாடல்களுக்குப் பொருத்தமான விளக்கத்தையும் தருகிறது. நுாலில் 35 தலைப்புகளும் 35 அணிகளைத் திறமையோடு விளக்குகிறது.
இவை தவிர, அணிகளின் வகைப்பாடும், தண்டியலங்காரத்தை ஒட்டியே அமைந்து உள்ளது. இன்றைய மாணவர்கள் படித்துணர்ந்து பொருளறிய சிரமப்படுவதை போக்கும் வகையில், அவர்கள் பயன்படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
வழி வழியாகக் கொண்டு வந்த அணி இலக்கண நுால்கள் அனைத்தையும் கொண்டு சிறந்த வழிகாட்டியாக சொந்தமாக 206 பாடல்களை எழுதி இணைத்துள்ளதால் இது ஒரு படைப்பிலக்கியமாகவும் மிளிர்கிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்