ஆன்மிக தகவல்கள் நிறைந்த தொகுப்பு நுால். ஒரு பொருளை நாம் விரும்ப துவங்கும் போதே வெறுக்கவும் நேரிடும் என்ற உண்மையை உணர்வதில்லை. விரும்புகிற போது வெறுக்கவும் கற்றுக் கொண்டால், வீணான மன வருத்தங்களுக்கு ஆளாக மாட்டோம் என குறிப்பிடுகிறது.
ஐதீகம் என்பதை தொன்னம்பிக்கை என்று குறிப்பிடுகிறது. அருமையான மொழிபெயர்ப்பு. இரண்டு ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை கொண்டு, காலம் யாரை எங்கே வைக்கும் என்பதை விவரிக்கிறது. நல்ல விதம் புரிய வைக்கிறது.