உணவு வகைகளில் உள்ள சத்துக்களை முறையாக சொல்லும் நுால். எப்படி உண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை எடுத்துரைக்கிறது. உணவும், அதில் உள்ள சத்துக்களையும் முதலில் விளக்குகிறது. அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகளை கூறுகிறது. ஒவ்வொரு சத்தும் உடலுக்கு தேவைப்படுவதன் அவசியத்தை நுணுக்கமாக கூறுகிறது.
சுற்றிலும் எளிதாக கிடைக்கும் மூலிகை மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை கூறுகிறது. அவற்றை உண்ண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. எந்த மூலிகை எந்த நோய் வராமல் தடுக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. உணவு வழியாக ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல ஆலோசனையை தரும் நுால்.
–
மதி