சோழ மண்டலப் பகுதியில் பவுத்த சமயம் பரவியிருந்தது பற்றி ஆய்வு செய்து வரலாற்று தகவல்களை தரும் நுால். பவுத்த தடயங்களை, ஆவணங்கள் வழியாக நிறுவுகிறது. சோழ மண்டலத்தின் வரலாற்று பின்னணியை முதல் பகுதியில் தருகிறது. அடுத்து, அங்கிருந்த பவுத்த சமயத்தின் தாக்கம் குறித்து ஆராய்ந்து சொல்கிறது. அந்த பகுதியில் பவுத்த பெரியவர்கள் மற்றும் பவுத்த வழிபாடு பற்றிய விபரங்களையும் தருகிறது.
சோழ மண்டலத்தில் பவுத்தத்தின் வீழ்ச்சி பற்றியும் பேசுகிறது. முறையான சிற்பம் மற்றும் ஆவண மேற்கோளுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன; உரிய படங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. பவுத்தம் தொடர்பான ஆய்வு நுால்.
–
ஒளி