தமிழ்மொழி வளர்ச்சியில் மூன்று சங்க செயல்பாடு பற்றி கூறும் நுால். மதுரையில் கூடல் என்ற பெயரில், 5ம் நுாற்றாண்டில் சங்கம் இருந்தது பற்றி தெரிவிக்கிறது. சங்கப்பலகை, தாராசுரம் கோவில் சிற்பத்தில் அமைந்த விபரத்தையும் அறியத் தருகிறது.
பட்டினப்பாலை பாடிய புலவருக்கு, சோழ மன்னன் பொன்னும், மண்டபமும் பரிசாக வழங்கியதை, பாண்டிய மன்னன் பொறித்துள்ளது குறித்து தெரிவிக்கிறது. சேர, சோழ, பாண்டியருக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவினாலும் மொழியை வளர்ப்பதில் இருந்த ஒற்றுமையை அறிய தருகிறது.
அகநானுாறு, புறநானுாறு, சிலப்பதிகாரம், மணிமேகலை நுால்களில் ராமாயணம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ராமேஸ்வரத்தில் ராமன் சிவபூஜை செய்தது பற்றி அகநானுாறு குறிப்பை உணர்த்துகிறார்.
மாலத்தீவை, ‘பல்பழந்தீவு’ என குறிப்பிட்டதாக அரிய தகவலை திரட்டித் தருகிறது. தமிழர் பண்பாட்டு செய்திகளை அறிய படிக்க வேண்டிய நுால்.
–
முகிலை ராசபாண்டியன்