சமூகத்தின் ஆணிவேராக விளங்கும் மாணவர், ஆசிரியர், பெற்றோர் கடமைகளை எடுத்துக்கூறும் நுால். இந்த மூவரையும் சரிவரப் பெற்ற சமுதாயம் சிறப்பாக இருக்கும் என விளக்குகிறது.
கடமைகள் என்னென்ன என்பதை வரிசைப்படுத்தித் தருகிறது. மாணவர்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கின்றன என்பதை, அவர்கள் நிலையில் நின்று அலசி தீர்வும் கூறுகிறது. இவ்வாறே பெற்றோர், ஆசிரியருக்கான அதற்கான சிக்கல்களையும் தீர்வுகளையும் முன்வைத்துள்ளது.
இந்த மூவருக்கான வழிகாட்டியாக இந்நுால் விளங்குகிறது. மூன்று நிலையினரும் படித்து அறிய வேண்டியது. உளியாக அமைந்துள்ள கருத்துகள், மாணவர், பெற்றோர், ஆசிரியர்களை செதுக்கும் வல்லமை பெற்றது.
–
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்