சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் சிறுகதை, ‘அம்மாசி தாத்தா’வில், முதியவரின் இறுதிக்கால வாழ்க்கை, ஒருவேளை சாப்பாட்டிற்காக படும் இன்னல்கள், அதிக வேலை வாங்கும் வீட்டு உரிமையாளர் மனம் திருந்துவது என அமைக்கப்பட்டு உள்ளது.
அடுத்ததாக, ‘சாட்சி’ சிறுகதை ஆணவக் கொலை குறித்து விளக்குகிறது. இரக்கமற்ற மனிதர்களை தோலுரித்துக் காட்டுகிறது. சகோதரனின் பிள்ளையை வளர்க்கும் ராசாத்தி கதாபாத்திரம், ‘சுமை’ சிறுகதை வாசகனின் மனதை கனக்க வைக்கும்படி அமைக்கப்பட்டு உள்ளது.
தலைப்பாக வரும், ‘ஊடு இழை’ கதையில், நெசவாளர் குடும்பம் ஒன்றின் வாழ்க்கை நிகழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. அந்தக் குடும்பத்தில் மனைவியின் பங்களிப்பும், தியாகமும் எப்படி இருக்கும் என பதிவு செய்யப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையான ‘செய்வினை’ குறித்தும், ஒரு சிறுகதை வாயிலாக கருத்துகள் கூறப்பட்டுள்ளன. ஆர்வத்தை துாண்டும் வகையில், எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்.
–
முகில் குமரன்