தமிழ்ச்சந்த வளர்ச்சி, தேம்பாவணியில் சந்த வகைப்பாடுகள், தேம்பாவணியில் பொருட்சிறப்பு, தேம்பாவணி சந்த தனிச்சிறப்பு என்ற பகுப்புகளைக் கொண்ட ஆய்வு நுால். வீரமாமுனிவரின் இசைப்புலமையும் தேம்பாவணியின் சந்தங்களையும் முழுமையாக அறிந்துகொள்ள உதவுகிறது.
வீரமாமுனிவர், தமிழில் பொருள் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கிய சதுரகராதி பெயர், பொருள், தொகை, தொடை ஆகிய பகுதிகளுடன் தமிழ்ச் சொற்களுக்கு பொருள் கூறுகிறது; தொடர்ந்து லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணத்தைத் திறவுகோல் என்னும் பெயரால் தந்துள்ளது. தமிழுக்கும் லத்தீன் மொழிக்கும் உறவுப் பாலம் உருவாக்கும் வண்ணம் பேச்சுமொழி அகராதி, போர்த்துக்கீசிய லத்தீன் தமிழ் அகராதி போன்றவற்றையும் உருவாக்கியது குறித்த குறிப்புகள் உள்ளன.
–
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்