ஆன்மிகத்தையும், ஞானத்தையும், வாழ்க்கை நெறியையும் அலசும் தொகுப்பு நுால். ஆசையை சீர்துாக்கித் தெளியும் போது, பாரம் வெகுவாக குறைவதை கூறுகிறது. உபநிடதங்களில் விஞ்ஞான கருத்துக்கள் பரந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
இறைவன் ஒரே சக்தியாக இருக்க முடியும் என்று கணிக்கிறது. டென்ஷனை குறைக்க தியானம் செய்யும் முறை, பொருள் பொதிந்த பிரார்த்தனை மகா சக்தியாக இருப்பதை விளக்குகிறது. மெய்ஞானம் பெற சரணாகதி தத்துவத்தை விளக்கி, கர்ம வினையே விதியாகிறது என்பதற்கு மகாபாரத கதையை எடுத்துக்காட்டுகிறது. தன்னம்பிக்கையை வளர்க்க வழிகாட்டுகிறது.
தோல்வியே பாடங்களைக் கற்றுத் தரும்; எதையும், யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்பதுடன், தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறது. முன்னேற்றத்துக்கு எல்லையே இல்லை என விளக்கும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்