ஆண் – பெண் இயல்புகளை பழங்கால இலக்கியங்கள் வழியாக விளக்கும் நுால். தமிழில் ஆண்களுக்கு எழுதிய முதல் நீதி நுால் என்கிறது. சிறு சிறு கட்டுரைகளாக எளிய நடையில் வாசித்து புரிந்து கொள்ள சுலபமாக அமைந்துள்ளது.
‘காத்தல் அளித்தல்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. உலகெங்கும் உள்ள ஆண்மையின் சின்னங்களை விளக்குகிறது. தேங்கிக் கிடப்பது, மரணத்தை விட கொடுமையானது போன்ற பொன்மொழிகளை உதிர்க்கிறது. தமிழர் அகக் கண்ணை திறந்து சிந்தனையை துலக்கும் கருத்துகளை கொண்டுள்ளது. சுவாரசியமாக வாசிப்புக்கும், புரிதலுக்கும் உகந்த நுால்.
–
மலர்