கொரோனா தொற்று முடக்க காலத்தில் நடந்த பல வகை சமூக நிகழ்வுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
கொரோனா பரவலின்போது ஏற்பட்ட குடும்பத் துயரம், கொந்தளிப்புகள், விரக்தி, சலிப்பு, அச்சத்தை பின்னோக்கி இட்டுச் சென்று காட்டி காட்சியாக விரிகிறது. தடைப்பட்ட நற்காரியங்கள், இணையவழிக் கல்வியால் ஏற்பட்ட குழப்பங்கள், அலைபேசி இல்லாத குடும்பங்கள் எதிர்கொண்ட இன்னல் போன்றவை முன்வைக்கப்பட்டுள்ளன.
வீட்டுக்குள் முடங்க வேண்டிய கட்டாய நிலை, ஊரடங்கில் வருமான இழப்பு, தொற்று நோயால் இறந்தோர் குடும்பங்களின் பரிதாப நிலை, பயணம் மேற்கொள்ள முடியாத இக்கட்டு போன்றவற்றை குறிப்பிட்டு பழைய நினைவுகளை மீட்டுக் காட்டுகின்றன.
எண்ணற்ற கெடுதல்களுக்கு இடையில் கொரோனா, சமத்துவத்தையும், உதவும் மனப்பான்மையையும் கற்றுத் தந்ததை முன்வைத்து காட்டுகிறது இந்த நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு