தென்னிந்திய பயணங்களில் அம்பேத்கர் ஆற்றிய உரைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள நுால். சொற்பொழிவுகளின் சுருக்கம், அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு, வரவேற்பு கூட்டம் நடத்தியது பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
சமூக அமைப்பில் உள்ள கொடுமையை முழங்கியதையும், விளிம்பு நிலை மக்களின் சமூக, சமய, பொருளாதார, கல்வி, அரசியல் விழிப்புணர்வுக்காக குரல் கொடுத்ததையும் விவரித்துள்ளது.
பெண்கள் சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்வதோடு சொத்து, உரிமைகளை உடைமையாக்குதல் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளதை கூறுகிறது. பிறப்பு அடிப்படையிலான வேறுபாடு நீக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘அறிவும் ஒழுக்கமும் ஒருங்கே அமைந்தால் இளைஞர்கள் சாதிக்க முடியும்’ என ஆற்றிய உரையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
–
ராம.குருநாதன்