ஆழ்மனதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை கூறும் நுால். ஆழ்மன சக்திகளை வசமாக்குவதற்கு மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் கலந்த ஆத்ம ஞானத்தைத் தியானத்தின் மூலம் பெறுவது ஒன்றே வழி என பதிவிடப்பட்டுள்ளது.
இன்றைய மனித மூளை மூன்று மடங்கு பெரிதாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. க்வாண்டம் சித்தாந்தம் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நம்பிக்கைகளே நிஜங்கள்; ஒரு பழக்கத்தை உருவாக்குவதும் மாற்றுவதும் எப்படி, ஆசைபட்டபடி ஏன் மாற முடியவில்லை, ஆழ்மனம் எழுதும் விதிகளை மாற்றி, தடைகளை மீறி வெற்றிகரமாக வாழ்வது எப்படி போன்ற கேள்விகளை விரிவாக விளக்குகிறது.
ஆரோக்கியம், அமைதி, மன நிறைவு, வெற்றி பெறும் ஆலோசனைகளை தருகிறது. சூழ்நிலைகளை ஈர்க்கவும், சூட்சுமங்களை எதிர்கொள்ளவும் நவீன அறிவியல் ஆராய்ச்சியுடன் எளிமையாக விளக்கி வழிகாட்டும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்