தீப.நடராஜன், காவ்யா, சண்முகசுந்தரம், வெளியீடு: காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை24. (பக்கம்: 551).
கம்பனைப் போல் மானுடத்தை நேசித்த வித்தகர் ரசிகமணி. செந்தமிழ்க் காவலர் ரசிகமணியின் 125வது பிறந்த நாள் நினைவாகத் தொகுக்கப்பட்ட இலக்கியக் களஞ்சியம் இந்நூல். தமிழர்களின் நல்லூழின் காரணமாகவே இவ்வரிய பொக்கிஷத்தை (1193 முதல் 1953 வரை) காத்து நமக்கு உடைமையாக்கிய பெருமை தொகுப்பாசிரியர்கள் இருவருக்கும் உரியது. 106 கட்டுரைகள். கம்பனைப் பற்றியது 25, கவிமணியின் ரசனையின் வெளிப்பாட்டில் விளைந்த இலக்கிய வளம் நிறைந்த ஆய்வுக் கட்டுரைகள் 35, தனிப்பாடல்கள் தொடர்பான திறனாய்வுக் கட்டுரைகள் 32, பொதுவான தலைப்புகள் கொண்டவை 14 என 106 கட்டுரைகளை உள்ளடக்கியது இந்நூல். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இவரது இல்லத்தில் நடக்கும் "வட்டத்தொட்டியில் பங்கு பெற்று, இலக்கிய ஆய்வரங்கத்தில் இவருடன் கலந்துரையாடிய இலக்கிய ஆர்வலர்கள் ஏராளம். ராஜாஜி, கல்கி, ஆ.சீனிவாச ராகவன், மா.பொ.சி., ஆர்.கே.சண்முகம் செட்டியார், முத்துசிவன், வல்லிக்கண்ணன், பாஸ்கரத் தொண்டைமான் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.