தமிழர் வீரத்தின் அடையாளமான படைக்கல பயிற்சி பற்றி எழுதப்பட்டுள்ள நுால். உரிய வரைபடங்களுடன் தெளிவாக விளக்கியுள்ளது. தகவல்களை 22 அத்தியாயங்களில் கொண்டுள்ளது. தொல் பழங்காலம், சங்க காலத்தில் போர் நடைமுறைகள் குறித்து ஆதார தகவல்களை தந்துள்ளது. காலந்தோறும் இருந்த படைப்பிரிவுகள் பற்றியும் பேசுகிறது. சிலம்பக் கலை குறித்து விரிவான தகவல்களை தருகிறது.
போர் தொடர்பாக தமிழகத்தில் நிலவும் மூடநம்பிக்கையை விளக்கி, தெளிய வைக்கிறது. தமிழரின் வீர வரலாற்றின் நுட்பத்தை விவரிக்கும் நுால்.