சமூகத்தின் தேவைகளையும், சமூகம் எதிர்கொள்ளும் அவலங்களையும் தெளிவுப்படுத்தும் நுால். சக மனிதனுக்கு மதிப்பு கொடுப்பது, மனிதனாக அங்கீகரித்தல், பரிவோடு அணுகுதல் போன்ற மாண்பின் அடிப்படையை தத்துவார்த்த சிந்தனையுடன் சொல்லியுள்ளார்.
விவசாயிகள் படும் வேதனை, காவல் நிலையத்தில் நிகழும் மர்ம மரணங்கள், அகதிகளின் உரிமை, போதிய உணவின்றி ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் மக்கள், அரசு பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கியுள்ளார்.
உட்கொள்ளும் உணவு முறை, ஆரோக்கியமாக வாழ உதவும் உணவு போன்றவற்றை விளக்கியது சிறப்பு. நீரின்றி அமையாது உலகு என்பதை நினைவூட்டுகிறது. நீரில்லாமல் பூமி வெப்பமயமாவதை பற்றி அறிவியல் ஆதாரத்துடன் கருத்துக்களை தருகிறது.
–
சக்திமலர்