இறந்தவனை உயிர்ப்பித்த சித்த புருஷர் ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் உட்பட மகான்கள் பற்றிய நுால். திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில் அரிசி, உணவுப் பொருட்கள் வள்ளலாரின் சித்தி வளாக மாளிகைக்கு வந்தன. அடிகளார் கனவில் வந்து அரிசி முதலிய உணவுப் பொருட்கள் வேண்டுமென்று கேட்டதால் எடுத்து வந்திருப்பதாக தெரிவித்தார். நாளை உணவுக்கு என்ன செய்வது என்று பணியாளர்கள் வருந்திய நேரத்தில் நடந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டனர்.
வாழ்ந்து மறைந்த 12 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, பட்ட துன்பங்கள், அதைத்தாண்டி செய்த தியாகங்களை எளிய நடையில் விளக்கியுள்ளார் ஆசிரியர். ஏற்றுக் கொள்ளும் வரை, அவர்களை என்ன பாடுபடுத்தியது, ஏற்றுக் கொண்ட பின் எப்படி கொண்டாடியது என்பதை புரிய வைக்கிறது. மகானாக மாறி வரம் பெற்று சித்தராய் மறைந்தவர்கள் பற்றி உரைக்கும் நுால்.
–
எம்.எம்.ஜெ.,