வ.உ.சி., ஆற்றிய தமிழ்ப்பணிகளை தெளிவாக ஆய்வு செய்து விளக்கும் நுால். கட்டுரையாளராக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, உரை ஆசிரியராக, பதிப்பாளராக, சொற்பொழிவாளராக, கவிஞராக இலக்கிய உலகில் எடுத்திருந்த அவதாரங்களை காட்டுகிறது.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி கருத்து தெரிவித்த உண்மையை எடுத்துரைக்கிறது. இந்த கருத்துகளுக்கு போதிய ஆதாரம் தரப்பட்டு உள்ளது. தமிழில் புதுச்சொற்கள் உருவாக்கும் எண்ணம் அந்தக் காலத்திலே இருந்ததை அறிய முடிகிறது.
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் பணியை செய்துள்ள வ.உ.சி., பல புதுச்சொற்களை உருவாக்கியுள்ளதை தெரிவித்துள்ளார் ஆய்வாளர். தத்துவ விளக்கத்தை வழங்கியது போலவே ஆங்கிலேய எதிர்ப்புக் கருத்துகளையும் எழுதி வந்துள்ளார். வ.உ.சி., பற்றி முழு இலக்கியப் பார்வையாக வெளிவந்துள்ள ஆய்வு நுால்.
–
முகிலை ராசபாண்டியன்