சாதாரணமானவர்களும் ஜோசியத்தைக் கற்று உணரும்படி எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் போது வெவ்வேறு வலிமைகளுடன் விளங்குவதும், ஒவ்வொரு கிரகத்திற்குமான நட்பு வீடுகள், பகை வீடுகள், சம வீடுகள், மூலத்திரிகோண வீடுகள், உச்ச வீடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ராசிக்கும் ஒன்பது பாதங்கள் எவையெவை என தரப்படுத்தப்பட்டுள்ளன. ராசி, கிரகங்கள் இவற்றின் திசை, நிறம், காலம் போன்றவையும், நட்சத்திரம், கரணம், கிழமை, யோகம், திதிகளில் பிறந்த பலன்களும் கணிக்கப்பட்டுள்ளன. நவக்கிரக சாந்திகள், லக்கினம் முதலாக 12 பாவங்கள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
கோசார பலன்கள், கிரகங்களின் சேர்க்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன. சோதிடக் கலையில் ஆர்வம் கொண்டோர் அவசியம் படிக்க வேண்டிய நுால்.
–
புலவர் சு.மதியழகன்